தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - etv bharat top ten news three pm

ஈ டிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pmetv bharat top ten news three pm

By

Published : May 22, 2021, 3:36 PM IST

சோதனை மேல் சோதனை... ஆம்புலன்ஸில் வெடித்த ஆக்ஸிஜன் சிலிண்டர்!

அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் நின்றிருந்த 108 ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

ரூ.6 கோடி மோசடி: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது பகீர் புகார்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி மோசடி செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

’கரோனா பரவல் எண்ணிக்கை ஜீரோ ஆகும் வரை சிறப்புக் குழு செயல்படும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு வீடுவீடாக ஆய்வு செய்ய கரோனா சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு மக்களை பரிசலில் அழைத்து செல்லும் மருத்துவருக்கு பாராட்டு!

நீலகிரி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை, ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத், பரிசல் மூலம் ஆற்றின் மறுபகுதிக்கு உயிரை பணயம் வைத்து அழைத்துச் செல்கிறார்.

ஆவின் பாலகத்தில் கைவரிசை காட்டிய நபர் கைது!

சென்னை: ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் நிவாரண நிதி: உதவித்தொகையை அளித்த ஆதரவற்ற மூதாட்டி

நாகப்பட்டினம்: ஆதரித்து பாதுகாக்க குழந்தைகள் இல்லாத நிலையில் தனது முதியோர் உதவித்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி மூதாட்டி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

வெப்பச்சலனம்: இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் ஊரடங்கு மீறல்: ரூ.37 லட்சம் அபராதம் வசூலானதாக தகவல்!

ராமநாதபுரம்: முழு ஊரடங்கை மீறியதாக 24 ஆயிரத்து 742 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.37 லட்சம் வரை அபராதம் பெறப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டு அட்டை வாங்க ஆட்சியர் அலுவலகம் வந்த கரோனா நோயாளி!

சிவகங்கை: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு அட்டையைப் பெறுவதற்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கரோனா நோயாளியால் அலுவலர்கள் மிரட்சி அடைந்தனர்.

சென்னை வந்தடைந்த 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்!

சென்னை: புனேவில் இருந்து இரண்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான நிலையம் சென்னை வந்தடைந்தன.

ABOUT THE AUTHOR

...view details