தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm

By

Published : Apr 27, 2021, 3:31 PM IST

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

தர்மபுரி: பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

கரோனா 2ஆம் அலை: வெறிச்சோடி காணப்பட்ட சென்னை விமான நிலையம்

சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால்,சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை கிடையாது!

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கரோனா கவலையின்றி வைகையில் நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள்

மதுரை வைகையாற்றில் இன்று சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து பழனிக்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது

பழனி: ஆந்திராவிலிருந்து பழனிக்கு சரக்கு லாரியில் 70 கிலோ கஞ்சா கடத்திவந்தவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை மழை ஒரு வரப்பிரசாதம்!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிகம் உள்ள காப்புக்காடுகள் (Reserve Forests) உள்ள மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவினால் காட்டுத்தீ அபாயம் குறைவு என்கின்றனர் வன ஆர்வலர்கள். மேலும், இந்த மழையின் மூலம் வன உயிரினங்களுக்குத் தேவையான தண்ணீரும் உணவுகளும் போதுமான இருப்பு உள்ளதாக வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படையற்ற செய்திக் கட்டுரையை வெளியிடாதீர்கள்: ஆஸி. ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்

அடிப்படையற்ற செய்திக் கட்டுரையை வெளியிட்டது தவறு என ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பச்சை பட்டுடுத்தி செயற்கை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்

கரோனா அச்சுறுத்தலால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.

வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது என அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவ ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details