தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm

By

Published : Feb 23, 2021, 3:11 PM IST

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியில் சிக்கிக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் - ராகுல் காந்தி வேதனை

டெல்லி: பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில் கட்டண விலை உயர்வின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பொறியில் சிக்கிக் கொண்டதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல்: 144 தடையுத்தரவை அறிவித்த ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் மீண்டும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திமுக-காங்., தொகுதிப்பங்கீடு: திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்!

திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் தலைமையிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அரசியல் களத்தில் தேர்தல் அறிக்கைகளின் விளையாட்டு

2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த திமுக, மின்வெட்டு விவகாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அதனை அறிக்’கை’யில் எடுத்தார் ஜெயலலிதா. 2013ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின்சாரம் மேலும் அதிகமாக உற்பத்தியாக்கப்படும் என்றும், இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தது அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் - முழு விவரங்கள்!

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு அறிக்கை தயார், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது - ஓபிஎஸ்

இடைக்கால பட்ஜெட்டை முழுவதுமாக புறக்கணிக்கிறது திமுக - துரைமுருகன் அறிவிப்பு!

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக முழுமையாக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கிணற்றுக்குள் தத்தளித்த நாய்க்குட்டிகளை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

திருப்பத்தூர்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 2ஆவது குடியிருப்புப் பகுதி அருகே கிணற்றில் உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர். இதன்மூலம் உயிர் அனைத்துக்கும் பொதுவானது என்பதை நிரூபித்துக் காட்டி அசத்திய தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

’விலங்குகளிடம் கருணை காட்டாத யாருக்கும் நாமும் கருணை காட்டக்கூடாது'

சென்னை: கோவில் யானைகளை பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணி... இம்முறை இயக்குநர் கமல் ஹாசன்?

நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. அது ‘மக்கள் நீதி மய்யம்’, "தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பிப்ரவரி 21, 2018இல் கட்சி தொடக்க விழாவில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. கமல் கவிதைகள், திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அரசியல் நிலைப்பாடுகூட எளிதில் சாமானியன் விளங்கிக்கொள்ள முடியாத 'மய்ய நிலைப்பாடு'.

ABOUT THE AUTHOR

...view details