தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 8, 2021, 7:08 PM IST

'ஸ்டாலின் தான் வராரு' - ஐ பேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழுவைச் சென்னையில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

சர்வதேச விருது பெற்ற தமிழ்நாடு வனச்சரகர்!

ராமநாதபுரம்: தமிழ்நாட்டை சேர்ந்த வனச்சரகர் சதீஷ், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றதற்கான சர்வதேச விருதைப் பெற்றுள்ளார்.

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்: இம்முறை என்ன செய்தது தெரியுமா?

திண்டுக்கல்: கொடைக்கான‌ல் கீழ்ம‌லை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்யும் காட்டு யானைகளை விரட்டியடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர்: நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிப்பு!

ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற பிஜாபூர் நக்சல் தாக்குதலின்போது கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிக்கப்பட்டார்.

’வீட்டின் பெரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்’ - ஆளுநர் வேண்டுகோள்

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், இச்சூழலை சமாளித்து வரவும், கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடவும் அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை தமிழ்நாடு மக்கள் அனைவரும் உடனடியாக பின்பற்றத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனாவா?

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியற்ற தகவல்கள் வெளிவரும் நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அளித்துள்ள பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசுபாட்டிற்கும் கரோனா உயிரிழப்புக்கும் தொடர்பு உள்ளதா - ஆய்வுகள் கூறுவது என்ன?

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான தீங்கை விளைவிக்கும் என அண்மையில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து காற்று மாசுபாடு உள்ள இடத்தில் அதிக நேரம் இருப்பது இறப்பு விகிதத்தை 8 விழுக்காடு அதிகரிக்கும் என ஆனல்ஸ் ஆப் த அமெரிக்கன் தொராசிக் சொசைட்டி (Annals of the American Thoracic Society) என்ற இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியப் பயணிகள் நியூசிலாந்து வர வேண்டாம்- பிரதமர் ஜெசிந்தா அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவுடனான பயணத் தொடர்பை நியூசிலாந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை தற்காலிகமாக துண்டித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கணுமா...அப்போ இதை செய்யுங்க!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் தயாரித்துள்ள ’99 சாங்ஸ்’ படத்தை வித்தியசமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார்.

’தேர்வுகளைக் கடந்து பெட்ரோல் விலை குறித்தும் பேசுங்கள்’ - ராகுல் காந்தி

தேர்வைவிட மிக மோசமான அச்சுறுத்தலை பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் தினமும் எதிர்கொள்கின்றனர். அது குறித்தும் பிரதமர் வாய் திறந்து பேசவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details