தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm

By

Published : Feb 26, 2021, 7:14 PM IST

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! அதிரடி காட்டும் அரசு!

சென்னை: அரசு கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் கட்சி, தனிநபர்கள் வங்கிக் கணக்கை கண்காணிக்க தனிப்படை- சத்யபிரத சாகு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் குறையும்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் குறையும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

1,754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தில் தேர்ச்சி!

சென்னை: ஆயிரத்து 754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் பழனிசாமி - ஸ்டாலின் விமர்சனம்

விழுப்புரம்: தமிழ்நாட்டில் செய்த கொள்ளையிலிருந்து தப்பிக்கவே நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரிப்பதாகவும், பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரை!

கோயம்புத்தூர்: உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரையை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! அதிரடி காட்டும் அரசு!

சென்னை: அரசு கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை ராவணன் பாம்பு கடித்து உயிரிழப்பு!

புதுக்கோட்டை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளையர்களை திணறடித்து முதல் பரிசு பெற்ற காவல்துறை ஆய்வாளர் அனுராதாக்கு சொந்தமான ராவணன் காளை பாம்பு கடித்து உயிரிழந்தது.

சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது

திருவண்ணாமலை: சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அலுவலர்கள் தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு!

சொட்டு நீர் பாசன கருவிகளை வழங்காமல் கடந்த ஆறு மாத காலமாக வேளாண்துறை அலுவலர்கள் தங்களை இழுத்தடி வருவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details