தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : May 28, 2021, 1:24 PM IST

முதலிடத்தில் கோவை - விசிட்டடிக்கும் முதலமைச்சர்!

கரோனா பாதிப்பில் சென்னையை முந்தி கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.

20 கோடியைக் கடந்த தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர், புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி: முதலிடத்தில் சென்னை!

இந்தியாவிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் தினந்தோறும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு விதிமீறல் : தியேட்டருக்கு சீல் வைத்த ஆட்சியர்!

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திரையரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார்.

ரயில்வே தொழிலாளர்கள் 15,600 பேருக்கு உணவு விநியோகம்!

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ரயில்வே தொழிலாளர்கள் 15,600 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.

பட்டினி கிடக்கும் பிராணிகள்: நிதியை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க அரசு ஒதுக்கிய 9 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு: 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்.

சென்னை: கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ்., அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பேருந்து நிலையம்: டெண்டர் பணிகளைத் தொடங்க உத்தரவு!

கரூர்: தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலைய அமைப்பதற்கான டெண்டர் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details