தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Mar 15, 2021, 1:05 PM IST

2 ஆண்டுகளில் 25 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை- மநீம வேட்பாளர் உறுதி

கன்னியாகுமரி: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரம் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்ற உத்திரவாதத்தை 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு தருவதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பி.டி. செல்வகுமார் உறுதியளித்துள்ளார்.

கோவையில் விரைவு ரயில் மோதி ஆண் காட்டு யானை படுகாயம்

திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதி படுகாயம் அடைந்த ஆண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

'விரைவில் பாஜகவுக்கு பிரபலங்கள் பரப்புரை செய்வர்': எல்.முருகன்

கோயம்புத்தூர்: முக்கிய பிரபலங்கள் கூடிய விரைவில் பாஜகவிற்காக பரப்புரை செய்ய வருவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

'அரசியல் தலைவர்களின் கல்லாப்பெட்டி மக்களின் கஜானாவாக வேண்டும்'- கமல்

தேர்தலில் இலவசங்களை அறிவித்து லாபத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசியல்வாதிகளின் கல்லாப்பெட்டி, மக்களின் கஜானாவாக மாறவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - தமாகா வேட்பாளர் பேச்சு

ஈரோடு: அதிமுகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா கூறியுள்ளார்.

திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பு பணியில் சீமான்

தான் போட்டியிடும் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பார்சல் சேவைகளை நவீனமயமாக்கும் ரயில்வே: பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்கள் இணைப்பு

சென்னை: பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப பார்சல் வேன்கள் இணைக்கப்படுகின்றன. அத்துடன் பார்சல்களை சுலபமாக அனுப்புவதற்குப் பார்சல் மேலாண்மைத் திட்டம் மூலம் பல்வேறு சிறப்பம்சங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கமல் விரைவில் புரிந்து கொள்வார் எனத் தெரிவித்தார்.

திரிணாமுலில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவி

இரண்டு நாட்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.

அம்பானி வீட்டருகே வெடிபொருள் வாகனம் இருந்த வழக்கு: என்ஐஏ கஸ்டடியில் எஸ்.ஐ

மும்பை: அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வாகன வழக்கில் கைதான உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸேவை, மார்ச் 25 ஆம் தேதி கஸ்டடியில் வைத்து விசாரிக்கத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details