தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

By

Published : Jul 24, 2021, 8:42 PM IST

ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

பொறி பறக்குதா? இணையத்தை கலக்கும் நெருப்பு தோசை

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நெருப்பு தோசை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர சிறப்பு குழு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளுக்கு, சட்ட ரீதியாக இந்திய குடியுரிமையை பெற்றுத்தர, அரசு சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நினைவோ ஒரு பறவை...மதுரையின் நினைவுகளை சுமக்கும் மகத்தான ஓவியர் மனோகர்!

மதுரையின் பாரம்பரியம் குறித்த மனோகர் தேவதாஸின் ஓவியங்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை. மிக நுணுக்கமாய் இவர் வரைந்த ஓவியங்கள் அனைத்துமே மதுரையின் நினைவுகளை இன்றும் சுமந்து நிற்கிறது.

யானைகள் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு

யானைகளின் வழித்தடம், வாழ்விடத்தைக் கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(யார்) கோயிலில் தரிசனம்

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக அண்டை நாட்டிற்கு செல்லும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

இந்தியாவிலிருந்து முதல்முறையாக அண்டை நாடான வங்கதேசத்துக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.

TNPL 2021: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சேலம்

திருப்பூர், சேலம் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் டேரில் பெராரியோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

TOKYO OLYMPICS: குத்துச்சண்டையில் இந்தியர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி

இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் ஜப்பான் வீரர் ஒஹாசவாவிடம் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார்.

உயிரை குடிக்கும் புதிய பூஞ்சை... அமெரிக்காவில் பதற்ற நிலை!

அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தும் 'கேண்டிடா ஆரிஸ்' என்கிற கொடிய பூஞ்சை தொற்று பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details