தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 9 PM - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

By

Published : May 3, 2021, 9:23 PM IST

திணறடித்த ராமு; புலம்பிய துரை...!

ஏழு முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் வெற்றி கடைசி சுற்றுவரை தொண்டர்களை ஆட்டம் காண வைத்தது. முடிவில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிக் கனியை ருசித்தார். எனினும், ஆகப்பெரும் கட்சியின் மூத்தத் தலைவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து அலசி பார்க்கலாம்.

நயினார் நாகேந்திரனால் மலர்ந்த தாமரை!

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்களை திமுக கூட்டணியும், இரண்டு இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி வாகை சூடியுள்ளது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று முதல் முறையாக தாமரை சின்னத்தை மலர வைத்துள்ளார்.

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 570 கிராம் தங்கம் பறிமுதல்!

சென்னை: சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில்,சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேஸ்டுகளை கடத்தி வந்த இருவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

திருப்பத்தூரில் லாரி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!

திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகனை புலம்பவிட்டு "ஜூ" காட்டிய ராமு!

வேலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்வரை இருக்கையின் நுணியில் அமர வைத்து, புலம்ப விட்டவர் ராமு. யார் அவர்...!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விராலிமலையில் வெற்றியை ருசித்த சி.விஜயபாஸ்கர்!

அதிமுக அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராகவிருந்த சி.விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பனை 23 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரவக்குறிச்சியில் இருந்து கரூர் - செந்தில் பாலாஜி வெற்றி

சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான எம்.ஆர். விஜயபாஸ்கரை சுமார் 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

’பாஜக வெற்றி தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ - திருமாவளவன் பேட்டி!

பாஜக வெற்றி தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடரும் மரணங்கள்... ஹவுஸ் புல் போர்டு போட்ட தகன மையம்!

பெங்களூரு: சாம்ராஜ்பேட்டை டி.ஆர் மில் தகன மையத்தில், ஹவுஸ் புல் போர்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details