’கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு எங்க ஆட்சியில் இவ்வளவு, இப்போ எவ்வளவு...’ - கலந்துரையாடிய ஸ்டாலின்
நேற்று (மார்ச்.22) ராமநாதபுரம் பரப்புரைக் கூட்டத்தில் பால், பருப்பு, கேஸ் ஆகியவற்றின் விலை எவ்வளவு என்று தொண்டர்களிடம் கேட்டறிந்து, சுவாரஸ்யமாக கலந்துரையாடி ஸ்டாலின் வாக்கு சேகரித்த விதம் அங்கிருந்த வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம்
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம், பஞ்சமி நிலம் மீட்பு என பல முக்கிய அம்சங்களைக் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை, நேற்று (மார்ச்.22) வெளியிடப்பட்டது.
’மொத்த நாட்டையும் சரி செய்வதற்காக வந்திருக்கிறேன்’ - சீமான் நம்பிக்கை
சென்னை: ஊர் எல்லையில் அய்யனார் போல மக்களைக் காப்பேன் என உறுதியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியை மட்டுமல்ல, மொத்த நாட்டையும் சரி செய்வதற்காகவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம்: தலைமை நடவடிக்கை
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட மூன்று நிர்வாகிகளை, அதிமுக தலைமைக்கழகம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.
’மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கித் தருவோம்’ - டிடிவி தினகரன் உறுதி
மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டில் ஒருவருக்கு வேலை தருவோம் என்றும் ஊழலற்ற ஆட்சி, அனைவரும் நிம்மதியாக வாழும் சூழலை அமைத்து தருவோம் என்றும் குளித்தலையில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.