நீர்ப்பறவையை போல நீருக்கு மேலே பறக்கும் கடல் விமானம்
பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், உடுப்பி இளைஞர்களுடன் இணைந்து மைக்ரோ-லைட் கடல் விமானத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவின், முதன்முதலாக இறக்குமதி செய்யப்பட்ட கடல் விமானத்தை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அந்த வரிசையில் தற்போது புஷ்பராஜ் கண்டுபிடித்த விமானமும் இணைந்துள்ளது. இந்த மைக்ரோ-லைட் கடல் விமானத்தை உருவாக்க புஷ்பராஜூக்கு 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. சரியான திட்டமிடல், விடா முயற்சி, ஆர்வம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு புஷ்பராஜ் மிகச்சிறந்த சான்று.
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 14 ஆண்டு சிறை தண்டனை, 60 ஆயிரம் ரூபாய் அபராதம்
புதுக்கோட்டை : பெற்ற மகளை நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தைக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது
சேலம்: போலி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனம் நடத்தி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 2 கோடி பணம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
புதுச்சேரி: உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
'கெடுத்து பழக்கமில்லை, கொடுத்துதான் பழக்கம்' - அமைச்சர் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘கோவில்பட்டி மக்களுக்கு கெடுத்து பழக்கமில்லை, கொடுத்துதான் பழக்கம்' எனக் கூறி டிடிவி தினகரனை சாடினார்.