தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்

By

Published : Mar 9, 2021, 9:14 AM IST

நாங்கள் சொன்னால் அவர்கள் காப்பியடிப்பார்கள்- ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் சொன்னேன். நான் நினைத்தது 4000 ரூபாய், ஆனால் 1000 ரூபாய் மட்டும் அறிவித்திருக்கிறார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க கோரி அதிமுக சார்பில் மனு

தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அதிமுக சார்பில் முல்லைவேந்தன் என்பவர் மனு அளித்துள்ளார்.

கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை நேற்றிரவு (மார்ச் 8) கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென வெடித்த அலங்கார விளக்கு... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்தது!

கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற பொருள்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்த நிலையில், குளக்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்கு ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுவரை 29 தேர்தல் வழக்குகள்: சென்னை காவல்துறை

சென்னை: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1622 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

நர்ஸிங் கல்லூரியை திறக்கக் கோரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்!

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே நர்ஸிங் கல்லூரி மூடி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவிடம் 5 தொகுதிகள் கேட்கிறோம்- ஜான்பாண்டியன்

காஞ்சிபுரம்: அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிம்ஸ் பூங்காவில் தயார் நிலையில் பச்சை ரோஜா

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா மலர்கள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன.

பிரபாகரன் தம்பி, உங்களை நம்பி - திருவொற்றியூர் மக்களிடம் சீமான் வாக்கு சேகரிப்பு

ஆட்சியாளர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்டை செய்ய துணிந்து நிற்கும் பிரபாகரனின் தம்பி, உங்களை நம்பி; திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன் என திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிப் பொங்க பேசினார்.

காமதிபுரா இணையத்தொடர் ஏன் வெளியாகவில்லை? மீரா சோப்ரா விளக்கம்

காமதிபுரா இணையத்தொடர் ஏன் இன்று (மார்ச் 8) வெளியாகவில்லை என்பது குறித்து நடிகை மீரா சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details