தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் top 10 news@ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணிச்செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Jul 19, 2021, 5:01 PM IST

Updated : Jul 19, 2021, 5:13 PM IST

’சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ - ஈபிஎஸ் பளீர்

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், சசிகலா வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவறான செய்தியைப் பரப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை 2021-22ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவது குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

திருப்தி இல்லாதவர்களுக்கு மறுதேர்வு

தனித்தேர்வர்களுக்கு கரோனா சூழலைப் பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

மேகதாது அணைக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் எதிர்ப்பு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்துவரும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

13 மாணவர் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர் பழனிசாமி - மா.சு. குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இருந்தவரை 'நீட் ' தமிழ்நாட்டில் எட்டிக்கூட பார்க்கவில்லை, சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாட்டிற்கு 'நீட்'டை கொண்டுவந்து 13 மாணவர் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய திட்டங்களுக்கு ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (ஜூலை 20) முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தனியார் விடுதியில் நடைபெற இருக்கிறது.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

மேகதாது அணை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டின் நலனில் முழு அக்கறையுடன் இருக்கிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கலில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

உளவு பார்க்கிறதா பெகாசஸ்? - மோடியும் அமித் ஷாவும் தெளிவுப்படுத்த கோரிக்கை

இந்தியர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலிய நிறுவனம் ஒட்டுக்கேட்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுப்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated : Jul 19, 2021, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details