தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் top 10 news@ 5 PM - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணிச்செய்திச் சுருக்கம்...

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jul 18, 2021, 5:14 PM IST

3ஆம் அலை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள் - மா. சுப்பிரமணியன் வேண்டுகோள்

மூன்றாம் அலை குறித்து சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியர் தனி இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்துப் போராட்டம்

வன்னியருக்கான தனி இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம், வன்னியர் தனி இடஒதுக்கீட்டு நகல் ஆகியவற்றை எரித்து கரூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

’துறை சார்ந்த பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமனம் செய்க’ - ராமதாஸ்

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக துறை சார்ந்த பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வடமாநிலத்தவர்களுக்கு பெண்களுக்கான இலவசப் பயணச்சீட்டு கொடுத்து நடத்துநர் முறைகேடு

சேலத்தில் பேருந்தில் பெண்களுக்காக கொடுக்கும் இலவசப் பயணச்சீட்டை, வடமாநில பெண்ணுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த நடத்துனரிடம் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!

ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

ஆவின் முறைகேடு - 34 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில், 34 பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அதன் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

80’ஸ் கேரக்டர்... ஸ்போர்ட்ஸ் மேன்... சார்பட்டாவுல எல்லாம் தானா அமைஞ்சது- ஆர்யா ஓபன் டாக்

பழைய மெட்ராஸை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் 'சார்பட்டா' படம் வரும் 22ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. கோலிவுட்டை கலக்கவிருக்கும் இப்படம் குறித்து, படத்தின் கதாநாயன் ஆர்யா பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சென்னைக்கு மருத்துவர்கள் தேவை: விரைவில் விண்ணப்பியுங்கள்

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 11 மாதங்கள் தற்காலிகமாகப் பணி புரிய 51 மருத்துவர்கள் தேவை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சங்கு கழுத்தழகி செளந்தர்யாவின் பிறந்தநாள் இன்று!

மறைந்த நடிகை செளந்தர்யாவின் 45ஆவது பிறந்த நாளான இன்று, #Happybirthdaysoundarya என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி, அவரது ரசிகர்கள் செளந்தர்யாவை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

IND vs SL: இந்திய அணி பந்துவீச்சு; இஷான், சூர்யகுமாருக்கு வாய்ப்பு!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details