தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்
ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்

By

Published : May 7, 2021, 5:01 PM IST

'தெலங்கானாவில் முழு ஊரடங்கு கிடையாது' - கே.சி.ஆர் திட்டவட்டம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியாது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலைத்துவிடும் என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க. ஸ்டாலின்: ஈரோட்டில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

நோட்டாவிற்கும் கீழ் சென்ற தேமுதிக... கட்சியின் எதிர்காலம் என்ன?

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளே தேமுதிகவுக்கு கிடைத்துள்ளது கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் கார் விபத்து... ஒருவர் உயிரிழப்பு... 2 பேர் படுகாயம்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்தனர்.

கரோனா சவால்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமாளிப்பார் - வைகோ மகன் துரை வையாபுரி

கரோனா தொற்று சவால்களை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் சமாளிப்பார் என வைகோ மகன் துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

கரோனா சவால்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமாளிப்பார் - வைகோ மகன் துரை வையாபுரி

கரோனா தொற்று சவால்களை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் சமாளிப்பார் என வைகோ மகன் துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, கரோனா நிவாரண நிதித் தொகையாக ரூ.4000 வழங்கும் திட்டத்தின் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோப்பில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராயபுரத்தை கைப்பற்றியது திமுக!

கரூர் மாவட்டம் கிருஷ்ணனராயபுரம் (தனி) தொகுதியை 10 ஆண்டுளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது.

சொன்னதை செய்யுங்கள்! திமுகவுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: மதுக்கடைகளை மூட வேண்டிய கோரிக்கை புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நீரேற்றும் பணி தொடக்கம் - சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து குடிநீரை பெற தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details