தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

By

Published : Apr 27, 2021, 4:48 PM IST

வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது என அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவ ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.

"எனது மகள், எனது பெருமை" மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்டின் காரணம்?

தனது மகள் முன்களப் பணியாளராகச் செயல்படுவதை நெகிழ்ச்சியுடன் மத்திய அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவிற்கான விமானங்களை ரத்துசெய்த ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கான அனைத்து நேரடி பயணிகள் விமானத்தையும் மூன்று வாரங்களுக்கு ரத்துசெய்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரம்

சென்னை: கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் இணைப்புகளுடன்கூடிய படுக்கை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித் துறை மேற்கொண்டுவருவதாகப் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிறுவனங்களை மத்திய அரசு மிரட்டினால் போதும்- ப. சிதம்பரம்

சென்னை: கரோனா தடுப்பூசி விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விலையை குறைக்கும் வழிமுறை குறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் விற்பனையாகும் ரெமிடெசிவிர் மருந்து: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

சென்னை: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், ரெம்டெசிவிர் மருந்தை விற்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் மருந்தைப் பெற காத்திருக்கின்றனர்.

பிபிஇ உடை அணைந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், மணமகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டததால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டு வந்த புற்றுநோயாளி !

பாட்னா: கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது புற்று நோயாளி கரோனாவிலிருந்து குணமடைந்தார்.

பாஜகவைச் சேர்ந்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19!

தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

திட்டமிட்டபடி மே 2இல் வாக்கு எண்ணிக்கை - சத்யபிரத சாகு

சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு உறுதியளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details