தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Apr 25, 2021, 5:06 PM IST

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி உறுதி

டெல்லி: மே ஒன்றாம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப். 24) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

முழு நேர ஊரடங்கு: தூத்துக்குடியில் 60 இடங்களில் போலீசார் வாகன தணிக்கை

தூத்துக்குடி: முழு ஊரடங்கு காரணமாக, 60 இடங்களில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கிய பத்திரிகையாளர்கள்!

ஈரோடு: முழு ஊரடங்கின்போது பணியாற்றிவரும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனை சுகாதாரத் துறை பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், காவல் துறையினருக்கு பத்திரிகையாளர்கள் பிஸ்கட், தேநீர் வழங்கி கவுரப்படுத்தினர்.

காட்டு பன்றியை வேட்டையாடிய நபர்கள் கைது

கோயம்புத்தூர்: வெடிகுண்டு வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய நபர்கள் இருவரை வனத்துறை அலுவலர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முழு ஊரடங்கு: விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கும் காவல் துறை

தென்காசி: முழு ஊரடங்கு விதிகளை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கு: மதுபானம், கள் விற்ற பெண் உள்பட மூவர் கைது

ஈரோடு: முழு ஊரடங்கின் போது மதுபானம், கள் விற்பனை செய்த பெண் உள்பட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 250 மதுப்புட்டிகள், 100 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அமீரக அரபு நாடுகளுக்கான விமானங்கள் 10 நாள்களுக்கு ரத்து!

சென்னை: இந்தியாவிலிருந்து துபாய், சாா்ஜா, அபுதாபி செல்லும் அனைத்து சா்வதேச விமானங்களும் பத்து நாள்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோக்கு இரண்டாவது முறை கோவிட்-19 பாதிப்பு

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு இரண்டாவது முறையாக கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

IPL 2021 CSK vs RCB: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தோனி!

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details