தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - tamilnadu top news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்தி
9 மணி செய்தி

By

Published : Oct 22, 2020, 9:04 AM IST

1. மீண்டும் சர்ச்சைக்குள்ளான நீதிபதி சி.எஸ். கர்ணனின் பேச்சு..

சென்னை: பெண் நீதிபதிகளுக்கு எதிராக ஆபாசமான, அவதூறான கருத்துகளை வீடியோவாக வெளியிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது தேசிய மகளிர் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2. கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட டச்சு மன்னர்!

ஹேக் : கரோனா வைரஸ் அச்சுறுத்தலை காலக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு விடுமுறை பயணம் மேற்கொண்டதற்கு டச்சு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

3. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் நியமனம்!

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸை நியமனம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

4. ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவிற்கு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் சுரேஷ்ராவ் தெரிவித்தார்.

5. 'விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறேன்'

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறேன் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

6. மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடு - பாஜக, அதிமுகவுக்கு ஸ்டாலின் வைத்த செக்!

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

7. பட்டுக்கோட்டையில் 6 குழந்தைகள் திடீர் மாயம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் ஒரே தெருவைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் திடீரென காணாமல்போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

8.84 ரன்கள் இலக்கை எட்ட, 13 ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஆர்சிபி!

கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எட்டு விட்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

9.விஷாலின் 'சக்ரா' ஓடிடி-இல் வெளியாக பெருந்தொகை உத்தரவாதமாக நிபந்தனை!

'சக்ரா' படத்தை ஓடிடி-இல் வெளியிடுவதற்கு முன்னர் நடிகர் விஷால், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் எனவும், படம் வெளியிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள தொகைக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.'பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை' - சரத்குமார் கோரிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் பெண்குழந்தைகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details