தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்திச் சுருக்கம்....

By

Published : Jul 26, 2021, 3:10 PM IST

Published : Jul 26, 2021, 3:10 PM IST

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

1. மீராபாய் வெள்ளி தங்கமாக வாய்ப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

2. கடலூரில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதித் தேர்வு

கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று (ஜூலை 26) தொடங்கியது.

3. சேலத்தில் காவலர் தகுதித் தேர்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு சேலத்தில் இன்று (ஜூலை 26) தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

4. எடியூரப்பா ராஜினாமா- பின்னணி என்ன?

பி.எஸ். எடியூரப்பா விதான்சவுதாவில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அவர் இன்று மதியம் 2 மணிக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் ஒப்படைத்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
5. நீலகிரியில் இறந்த குட்டி யானை உடல் மீட்பு

கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் இறந்த குட்டி யானையின் உடல் 3 நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

6. தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!

தனித்தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு பணிகளுக்கு துணை நின்றவர் தமிழறிஞர் இளங்குமரனார் என அவர் குறித்த நினைவுகளை இரங்கல் குறிப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7. மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், பாஜக ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்கு தாமதமாகவும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

8. தமிழில் நாயகியாக அறிமுகமாகும் சூப்பர்ஸ்டாரின் பேத்தி!

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேத்தி தன்யா ராம்குமார் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

9. குஷ்புவை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் முடக்கம்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

10. பேக்கரியில் திடீர் தீ விபத்து - லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

ராமநாதபுரம் கேணிக்கரையிலுள்ள பேக்கரியில் இன்று (ஜூலை 26) காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

ABOUT THE AUTHOR

...view details