தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - etv bharat

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 18, 2021, 11:21 AM IST

1. வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

2. விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் சோதனை

கோவையில் உள்ள சுகாதாரத் துறைமுன்னாள்அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

3. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

4. ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வு இல்லை - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வு இல்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த நிலையில் அதற்குத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

5. 'திருமாவளவன் ஒரு சமூக விரோதி!'

திருமாவளவன் ஒரு சமூக விரோதி என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

6. ஐ.பி.யின் தொகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த பாமக!

பாமக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கவிஞர் திலகபாமா, கொழிச்சாமலை மலைவாழ் மக்களுக்கு ஐந்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.

7. பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டவர் கைது

மண்ணடி அருகே தன்னுடன் வேலைசெய்யும் பெண்ணிடம் தகாத சொற்களால் பேசி, தகாத முறையில் நடந்துகொண்டவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

8. காசு கேட்ட காவலரை கார் பேனட்டில் தூக்கிச்சென்ற பரபரப்பு சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள முந்த்வா பகுதியில், சோதனையில் ஈடுபட்டுவந்த காவலர்கள், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கார் ஓட்டுநருக்கு 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதற்காக கார் ஒட்டுநர் ஸ்ரீதர் கந்தவர், காரை வேகமாகச் செலுத்தி 700 முதல் 800 மீட்டர்வரை காவலர் சேஷ்ராவ் ஜெய்பாயை (43) காரின் முன்பகுதியில் தூக்கிச்சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் கொடுத்த புகாரின்பேரில் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

9. சாதிய விவகாரம்: கைதாகி அரைமணி நேரத்தில் வெளிவந்த யுவராஜ் சிங்!

கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பான வழக்கில் கைதான இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அரைமணி நேரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

10. T20 WORLDCUP: ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி

டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் நாளான நேற்று (அக். 17) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details