தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - 3 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3PM
3PM

By

Published : Apr 11, 2021, 3:14 PM IST

1.மாதவராவ் மறைவு: தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2.அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய லுலு மால் தலைவர்!

திருவனந்தபுரம்: லுலு மால் தலைவர் யூசுப் அலி பயணித்த ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

3.சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: பாகோவில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையும், ராணுவமும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

4.ஏப்ரல் 17ஆம் தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது.

5.இயந்திரக் கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து

துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

6.'மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்'

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், மறைந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

7.பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதல் இந்தியப் பயணம்

கடந்த 1961ஆம் ஆண்டு, பிரிட்டன் இளவரசர் பிலிப்- ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் முதன்முதலாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது அவர்களை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தனர். அப்போது, சர்வதேச ஊடகத்தின் பேருபொருளாக அப்பயணம் மாறியது.

8.விஜய் வழியில் நேபாளுக்கு சைக்கிளில் புறப்பட்ட கேரள இளைஞர்!

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக, கேரளாவிலிருந்து நேபாளம் வரை, சைக்கிளிலேயே சென்று தனது எதிர்ப்பை இளைஞர் ஒருவர் தெரிவிக்கவுள்ளார்.

9. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி

ஜகார்தா: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

10.மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்ற நயன்தாரா

சென்னை: நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details