தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top 10 news
etv bharat top 10 news

By

Published : Aug 29, 2020, 9:09 AM IST

"வசந்தகுமார் உயிரிழக்கும்போது அவருக்கு கரோனா இல்லை"- மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் உயிரிழக்கும்போது, அவருக்கு கரோனா தொற்று இல்லை என அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சகோதரனின் இறப்பு: அதிர்ச்சியில் மயங்கிய குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!

ஹைதராபாத்: தனது இளைய சகோதரனும், எம்.பி.யுமான வசந்தகுமாரின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உழைப்பால் உயர்ந்த வசந்த குமார்!

காங்கிரஸ் எம்.பி.யும் தொழிலதிபருமான வசந்தகுமார் குறித்த வாழ்க்கை வரலாற்றைக் காண்போம்.

'ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்' - தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

ஹைதராபாத் : ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என வசந்தகுமார் எம்.பி.-யின் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யும் வசந்தகுமாரின் கொள்கை என்றென்றும் நிலைத்திருக்கும் - ராகுல் காந்தி

டெல்லி: மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் கொள்கை மீது வசந்தகுமார் கொண்ட உறுதி என்றென்றும் நிலைத்திருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பரசுராமருடன் போர்: தோலக்கு சிகரத்தில் தோரணையாக அமர்ந்திருக்கும் விநாயகர்!

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா சிகரத்தில் உள்ள விநாயகர் சிலை மிகவும் அரிதான சிலையாக கருதப்படுகிறது. இவரை மக்கள், “ஏகாதந்தா” என அழைக்கின்றனர்.

கரோனா பாதித்தவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதலால் பாதிக்கப்பட்ட 48 வயது ஆணிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் இல்லை, வேலையாள்கள் இல்லை; தலைக்கு மேல் தொங்கும் கடன் - கலக்கத்தில் நிறுவனங்கள்

சென்னை: உரிய வேலையாள்கள் கிடைக்காமலும், புதிய ஆர்டர்கள் இல்லாமலும் சிக்கித் தவித்துவரும் சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கடன் சுமை காரணமாக விழிபிதுங்கி தவித்துவருகின்றன.

'ஓணமே வரவேற்கும் தங்கத் தாரகையே'

நடிகை ரைசா வில்சன் புகைப்படத் தொகுப்பு

முதல் டி20: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details