தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ETVBharat latest news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat tamil
etv bharat tamil

By

Published : May 25, 2020, 12:59 PM IST

மாநிலங்களின் கெடுபிடியால் விமான சேவை மந்தம்!

டெல்லி: பல மாநிலங்களும் உள்நாட்டு விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், விமான டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: மகாராஷ்டிரா முதலமைச்சரை விமர்சிக்கும் மத்திய அமைச்சர்

மும்பை: மகாராஷ்டிராவிலிருந்து புறப்படும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கிய பஞ்சாப்!

மொகாலி: பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணிப்பவர்களுக்கு சண்டிகர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படும் என மொகாலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கால்வாயைத் தூர்வாரும் பணியில் கற்பனை கணக்கை காட்டவேண்டாம்- அரசை சாடிய ஸ்டாலின்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளுக்கு அலுவலர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகளைப் பெற்று தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்துவிட்டது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கி கணக்குக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசை சாடியுள்ளார்.

’தேசிய ஊரக வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்’

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு!

நியூயார்க் : குழந்தைகள் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து மான்டிஃபியோர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி இணைந்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

'க/பெ ரணசிங்கம்' இன்னொரு வலி: டீசரை பாராட்டிய வைரமுத்து!

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' படத்தின் டீசரை பார்த்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உயிரிழந்தார்!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று முறை ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்தவருமான பல்பீர் சிங், உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

உடான் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட வழிகளில் விமான சேவை!

விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், நெடுந்தூரத்தில் இருக்கும் பயணிகள் தங்கள் வீடுகளுக்குச் சென்றடைய ஏதுவாக, உடான் திட்டம் மூலம் விமான போக்குவரத்தை குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

வென்டிலேட்டர் பகிர்வுக்கு புதிய வழிகளைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வென்டிலேட்டர்களைப் பகிர்வதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details