தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9PM
9PM

By

Published : Jul 29, 2021, 9:14 PM IST

1. ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு; திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்

மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு என்ற ஒன்றிய அரசின் நகர்வு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2. 'நடைமுறைக்கு வருகிறது ஓபிசி 27% இட ஒதுக்கீடு; பாஜக ஆட்சியில் உண்மையான சமூகநீதி'

2021-22 ஆண்டுகளுக்கான ஓபிசி 27 விழுக்காடு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்குவருகிறது.

3. டெல்லியில் கனிமொழி - மம்தா பானர்ஜி சந்திப்பு

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

4. கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்குத் நீர் திறப்பு

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

5. பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: வியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சந்தேகத்தின்பேரில் 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

6. 30 குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள்

கர்நாடகாவில் 30க்கும் மேற்பட்ட குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. குஜராத்தின் கட்ச்சில் 'ஹை-அலர்ட்' - உஷார் நிலையில் பிஎஸ்எஃப்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8. 7 கோடி ஃபாலோயர்ஸ்: மாஸ் காட்டும் மோடி

பிரதமர் மோடியின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்த நிலையில், #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

9. அருள்நிதியின் 'தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'தேஜாவு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

10. TNPL 2021: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச முடிவு!

திருச்சி, திருப்பூர் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details