தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 மணி செய்தி
9 மணி செய்தி

By

Published : Jul 27, 2021, 9:04 PM IST

1. 15 நாட்களில் குடும்ப அட்டை - அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2. புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கவும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் நுட்ப பிரிவுகளை தோற்றுவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

3. சென்னை வந்தடைந்த சுமார் ஒரு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!

புனேவில் இருந்து விமானம் மூலம் 10 பார்சல்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

4. ஊருக்கு பாதை இல்லை... மாயாற்றில் இறங்கி உடலை எடுத்துச் செல்லும் அவலம்

கல்லாம்பாளையத்தில் பாதை இல்லாததால் மாயாற்றில் இறங்கி சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

5. ’குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்க’ - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, உரிம விதிகளின் படி குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. நான் ஆட்சிக்கு வந்தால்...: தன் பெயரில் போலிக் கணக்கால் அதிர்ந்த அகிலேஷ் யாதவ்... புகாரளித்த கட்சியினர்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

8. உலக பாரம்பரியச் சின்னமான குஜராத்தின் ’துலாவிரா’ : பிரதமர் மோடி மகிழ்ச்சி!

குஜராத்தில் உள்ள ஹரப்பா நாகரீகக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமான ’துலாவிரா’ நகரம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக இன்று (ஜூலை.27) அறிவிக்கப்பட்டது.

9. தனுஷின் காமன் டிபியை வெளியிட்ட செல்வா

இந்த காமன் டிபியில் தனுஷ் பெற்ற விருதுகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனுஷ் கிரேக்கர்கள் போல் உடை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

10. ஒலிம்பிக்கில் எதிராளியை கடிக்க பாய்ந்த குத்துச்சண்டை வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் மொராக்கோ நாட்டு வீரர், எதிராளியை கடிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details