தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 PM
9 PM

By

Published : Nov 30, 2020, 9:00 PM IST

1.வர்த்தகர்களுக்கு வங்கிகள்தான் வில்லன்: CAIT அமைப்பு குற்றச்சாட்டு

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் சலுகைகள் வர்த்தகர்களை பெருமளவில் பாதிப்பதாக CAIT அமைப்பு தெரிவித்துள்ளது.

2.கர்ணனை கைது செய்யாதது ஏன்? டிஜிபி, காவல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறை நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து, டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் இருவரும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.தமிழ்நாட்டில் இன்று மேலும் 1410 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று(நவ.20) மேலும் 1410 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

4.தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

தெற்கு வங்கக்கடல் மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

5. முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படத்துடன் அபராதம்!

பனாஜி: முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுப்பதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என பனாஜி மேயர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

6. மேற்கு வங்கத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்!

கொல்கத்தா: சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில், இலவச ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

7.கோவை வழக்கறிஞர் மோசடி மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பு

கோவை: மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற வேறு ஒரு பெண்ணை கொலை செய்து மனைவி இறந்ததாகக் கூறி இறப்புச் சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அவரது மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

8.இறுதிகட்ட பணியில் 'சினம்'... திரையரங்கில் சந்திப்போம்: 'பாரி வெங்கட்'டின் லேட்டஸ் ட்வீட்

சென்னை: தனது நடிப்பில் உருவாகியுள்ள 'சினம்' படத்தின் இறுதிகட்டப்பணிகள் நிறைவடையவுள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

9.“இந்திய அணியின் நம்பகமான வீரராக இருக்க விருப்பம்” - ஷம்ஷர் சிங்

இந்திய ஹாக்கி அணியின் நம்பகமான ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என இளம் மிட் ஃபீல்டர் ஷம்ஷர் சிங் தெரிவித்துள்ளார்.

10.அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவசர அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details