தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9pm
9pm

By

Published : Nov 25, 2020, 8:58 PM IST

1. நிவர் புயல்: சிறப்பு ரயில்கள் ரத்து!

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையிலிருந்து மங்களூரு, திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (நவ.25) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்துசெய்யப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

2.பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து அமித்ஷா பேசலாமா? - ஸ்டாலின் கேள்வி

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசலாமா என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

3.ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் சென்னை வருகை!

சென்னை : நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் சென்னைக்கு வருகை தந்துள்ளது.

4.நிவர் புயல் மீட்புப் பணியில் ராணுவம், கடலோரக் காவல்படை...!

சென்னை: நிவர் புயல் மீட்புப் பணியில் ராணுவம், கடலோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.தமிழ்நாட்டில் மேலும் 1,534 பேருக்கு கரோனா

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் ஆயிரத்து 534 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 74 ஆயிரத்து 710ஆக உயர்ந்துள்ளது.

6.ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: அடுத்த மேயர் யார் தெரியுமா?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் மேயர் ஜுனைத் மட்டு, இரண்டாவது முறையாக மேயராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

7.விளையாட்டுத்துறையை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி!

டெல்லி : விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் பிரிக்ஸ் நாடுகளுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

8.8 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!

மதுரை: எட்டு வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

9.நியூ., தொடரில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது - முகமது அமீர்!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்காதது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

10.'தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது' - கே.எல். ராகுல்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இடத்தை இந்திய அணியில் வேறு யாராலும் நிரப்ப முடியாதென இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details