தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9pm
9pm

By

Published : Nov 8, 2020, 9:08 PM IST

1. சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி பட்டாசு விற்பனை மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

2. தமிழ்நாட்டில் 2334 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 8) 2334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

4. தீபாவளி பண்டிகை: தி.நகரில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சென்னை தியாகராய நகரில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

5. ஸ்டாலினுடைய பினாமியாக செயல்படுகிறார் நாராயணசாமி - பாஜக தலைவர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு

வேல் யாத்திரை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கொச்சைப்படுத்தி பேசிவருவது கண்டனத்துக்குரியது. திமுக தலைவர் ஸ்டாலினின் பினாமி போல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார்.

6. காவல் நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பித்த விவகாரம் - 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்த நான்கு கைதிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

7. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் வசதி

சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் பிரத்யேகமாக 2 சிடி ஸ்கேன் பொருத்தப்பட்டுள்ளது.

8.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் பதுக்கல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயத்தை பதுங்கிய வெளிமாநில வியாபாரிகளிடம் வேளாண் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

9. டாஸ் வென்ற டெல்லி... பேட்டிங்கைத் தேர்வு செய்த ஸ்ரேயாஸ் ஐயர்...!

ஹைதராபாத் அணிக்கு எதிரான 2ஆவது குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

10. 'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு!

நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details