தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - etv bharat tamil news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9AM
9AM

By

Published : Aug 12, 2021, 9:13 AM IST

1. விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்10

அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-03 உடன், ஜிஎஸ்எல்வி - எஃப்10 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் இன்று (ஆகஸ்ட். 12) செலுத்தப்பட்டது.

2. உலக இளைஞர்கள் தினம் - லட்சம் இளைஞர்கள் இங்கே ஒரு விவேகானந்தர் எங்கே?

பல இளைஞர்களுக்கு தற்போது சமூகம் குறித்த பார்வையில் பக்குவம் கூடியிருக்கிறது. அதேசமயம் இந்த சுதந்திரத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி மனித சமூகத்தை நாகரீகமான அடுத்தக்கட்டத்துக்கு அவசியம்.

3. தலைவர்களின் பெயர் சூட்ட கோரிய வழக்கு: பொதுப்பணித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசின் பொதுத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டப்படும்போது தமிழறிஞர்கள், தேசிய தலைவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் பொதுப்பணித் துறைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

4. காவிரி தவழ்ந்தோடும் சோழ நாட்டை அழகுபடுத்தும் பணி தீவிரம்

சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் நேற்று (ஆகஸ்ட் 11) அறிவிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சிக் கட்டடத்தை அழகுபடுத்தும் பணி, சீர்மிகு நகரம் திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

5. பட்ஜெட் 2021: புதுமையை புகுத்தியிருப்பாரா பிடிஆர்... ஓர் அலசல்!

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. எஸ்.பி.வேலுணியின் நண்பர் நிறுவனத்தில் தொடரும் சோதனை!

கோவை: பீளமேட்டில் அமைந்துள்ள கே.சி.பி.இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

7. போலி பணி நியமன ஆணை: 57 லட்சத்தை சுருட்டிய நால்வர் கைது

சென்னை: கிண்டியில் இயங்கும் குறு, சிறு தொழில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

8. ’அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடித்திடுக’ - முதலமைச்சரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தெற்கு அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில், திமுக எம்எல்ஏ சம்பத், நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.

9. டெல்டாவிற்கு எதிராக 83% பங்காற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசி!

டெல்டா மற்றும் மாறுபட்ட வைரஸிற்கு எதிராக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 83 விழுக்காடு பங்காற்றுகிறது என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

10. தாயாக முதல் பிறந்தநாள்... HBD சாயிஷா!

நடிகை சாயிஷா இன்று (ஆக.12) தனது 25ஆவது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details