தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9AM - 9am news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

9AM
9AM

By

Published : Aug 10, 2021, 8:49 AM IST

1.எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

2. உலக சிங்கங்கள் தினம் - வனவேந்தனை காப்பது நமது கடமை

சிக்கல்களைக் கடந்து வாழ்வது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; மற்ற உயிரினங்களுக்கும்தான். நம்மால் முடிந்தவரை மற்ற உயிரினங்களுக்குத் தொல்லை தராமல் வாழ்வோம், அது உலக சிங்கங்கள் தினம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

3. ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை சுழற் சங்கங்கள் சார்பில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

4.”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்

ஆர்க்டிக் கடற் பகுதியில் உள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம் என ஐபிசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5. கொடைக்கானலில் அனுமதியின்றி கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் அனுமதியின்றி கூடாரம் அமைத்ததாகக் கூறி 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6. ஆவின் பால் அட்டைதாரர்களைக் குறைக்க நடவடிக்கையா? - ஓபிஎஸ் எச்சரிக்கை

பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் மறைமுகமாக எந்த நடவடிக்கையையும் ஆவின் நிர்வாகம் எடுக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

7. விமானத்தில் 883 கிராம் தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த ஏர் அரேபியா விமானத்தில் பேஸ்ட் வடிவிலான 883 கிராம் தங்கத்தை கடத்திவந்த இருவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

8. ஆன்லைன் மூலம் இன்டர்ன்ஷிப் பயிற்சி - அண்ணா பல்கலைக்கழகம்

கரோனா காரணமாக இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு செல்ல முடியாத இறுதியாண்டு மாணவர்கள், ஆன்லைன் மூலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

9. “ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவு!

துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அலுவலராக வருகிறார் ரகுமான். ஆபரேஷன் அரபைமா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

10.62 ரன்களுக்கு சுருண்ட ஆஸி: தொடரை 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய வங்கதேசம்!

கடைசி டி20 ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 62 ரன்களில் சுருட்டி, வங்கதேசம் அணி இமாலய சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 -1 என்ற கணக்கில் தொடரை வங்கதேச கிரிக்கெட் அணி தன்வசப்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details