தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9AM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

9AM
9AM

By

Published : Aug 9, 2021, 9:03 AM IST

1. அப்போ பொன்னையன், இப்போது பிடிஆர்!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிடுகிறார்.

2. கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்பு

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வழி வகுப்புகள் இன்று(ஆக.9) முதல் தொடங்குகின்றன.

3. நீருக்குள் விஜய் ஓவியம் - கல்லூரி மாணவர் சாதனை

பெரம்பலூரில் நீருக்கடியில் எனாமல் பெயிண்ட் மூலம் நடிகர் விஜய் ஒவியத்தை வரைந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

4. புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நடப்பாண்டில் நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு தெரிவித்துள்ளார்.

5. உயர் அலுவலர்கள் பணியிடை நீக்கம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய உயர் அலுவலர்கள், உதவியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

6. திருவள்ளூர் பேருந்து நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை

குறுகலான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் பேருந்து நிலையத்தை மாற்று இடத்தில் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7. பிரதமர் வீட்டின் முன் அண்ணாமலை போராட்டம் நடத்த வேண்டும் - கே.எஸ். அழகிரி

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

8. நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது.

9. மும்பை புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்!

மும்பை புறநகர் ரயில் சேவைகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும், கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

10. 'நேர்கொண்ட பார்வை' மகிழ்ச்சியான குழு - தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட்

சென்னை: அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details