தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7AM
7AM

By

Published : May 9, 2021, 7:21 AM IST

1.காலை 7 முதல் இரவு 9 மணிவரை மெட்ரோ இயங்கும்

சென்னை: நாளை (மே.9)சென்னை மெட்ரோ ரயில் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.பேனரை அகற்ற சொன்ன முதலமைச்சர்!

சென்னை: தலைமைச் செயலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகிய இருவரின் பேனர்களும் அகற்றப்பட்டன.

3.ஊரடங்கு காரணமாக கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

சிவகங்கை: இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், கீழடியைச் சுற்றி நடைபெறும் ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

4.'முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!

சென்னை: முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5.சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவிர்!

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும், பொது பயன்பாட்டிற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு வருகிறது. உரிய ஆவணங்களை சமர்பித்து மருந்துகளை வாங்கிச் செல்லலாம் என, மதுரை அரசு ராசாசி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

6.ஊரடங்கு காரணமாக கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

சிவகங்கை: இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், கீழடியைச் சுற்றி நடைபெறும் ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

7.மெயின்பட்: சத்தீஸ்கரின் வசீகர கம்பளம்!

பார்க்கும்போதே கண்களைப் பறிக்கும் வண்ண வண்ண நூல்களால் நெய்யப்பட்ட இந்த மெயின்பட் கம்பளங்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
8.இந்தியாவுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அனுப்பி வைத்தது இங்கிலாந்து!

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் 124, நேற்று (மே7) வடக்கு அயர்லாந்தில் பெல்பாஸ்டிலிருந்து ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு இந்தியாவிற்கு புறப்பட்டது.

9.80 வயது மூதாட்டியை கிணற்றிலிருந்து மீட்ட ஆந்திர காவலர்கள்!

த்தூர் மாவட்டம் ரேனிகுண்டா அருகே கிணற்றில் தவறி விழுந்த, சுப்பம்மா என்ற 80 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட சிவகுமார், மகேஷ் என்ற இரண்டு காவலர்களின் துணிச்சல் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இருவரின் சாமர்த்தியத்தையும் வியந்து, திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அப்பலா நாயுடு வெகுமதி ஒன்றை அளித்துள்ளார்.
10.'தன்னம்பிக்கை... தளராத உழைப்புமே மிகமிக உன்னதமென' முதலமைச்சரை வாழ்த்திய பாக்யராஜ்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்தியும், பாராட்டியும் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details