தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7AM
7AM

By

Published : May 8, 2021, 7:17 AM IST

1.அமைச்சரவையில் உதயநிதிக்கு நோ... ஸ்டாலினின் அடுத்த பிளான்

சிறிய அளவிலான அவப்பெயரைக்கூட சம்பாதித்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2.'புதிய பொறுப்பாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்' - டாக்டர். சந்தோஷ் பாபு

சென்னை: புதிய பொறுப்பாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மயயம் கட்சியின் தலைமை நிலைய பொதுச் செயலர் டாக்டர். சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

3.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்

தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நடக்கக்கூடாது என்பதில் அதிகாரத்திற்கு வந்த பிறகும் ஸ்டாலின் தெளிவாக இருப்பதன் மூலம், அவரது ஆட்சி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியாக அமையும்.

4.பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாள்களுக்குள் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

5.நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜன் உயிரிழப்பு

டெல்லி: கரோனா காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் இன்று உயிரிழ்ந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

6. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி

சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

7.தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்!

தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

8.தொழிலாளியின் நேர்மையை பாராட்டி ஆட்டோ பரிசு வழங்கிய முதலாளி!

கோயம்புத்தூர்: அல்அமீன் காலனி பகுதியில் தன்னிடம் ஆட்டோ ஓட்டுநராக பணி புருந்தவரின் நேர்மையை பாராட்டி ஆட்டோவை பரிசாக வழங்கிய முதலாளியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

9.கர்நாடகாவில் முழு ஊரடங்கு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

10.ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி

சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details