தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - காலை 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

7AM
7AM

By

Published : May 4, 2021, 7:00 AM IST

1.கரோனா தொற்று பரவல்: புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

2.'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுத்தேர்தல்' இருதரப்பும் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுத்தேர்தல் நடத்த சம்மதமா என இருதரப்பும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.கரோனா தொற்று உயிரிழப்பு - பாதி எரிந்த உடலை உண்ணும் நாய்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனம் செய்யும் இடத்தில் பாதி எரிந்த உடலை அங்கிருக்கும் நாய்கள் உண்பதகாக கூறப்படுகிறது.
4.'கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார்'-திருமாவளவன்!

சென்னை: கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

5.'ராசி இல்லாதவர்' - கேலி, கிண்டலுக்கெல்லாம் வைகோ வைத்த முற்றுப்புள்ளி

'ராசி இல்லாதவர்' என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளார்.

6.உயிரோடு இருந்த நோயாளி இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உயிரோடு இருந்த நோயாளி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7.மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

8.கரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறேன்...கவலை வேண்டாம் : அல்லு அர்ஜுன்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

9.நாளை யூடியூப் தளத்தில் வெளியாகிறது கர்ணனின் மஞ்சனத்திப் புராணம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் இரண்டாவது பாடலான 'மஞ்சனத்திப் புராணம்' நாளை யூடியூப் தளத்தில் வெளியாகிறது.

10.துரைமுருகனை புலம்பவிட்டு "ஜூ" காட்டிய ராமு!

வேலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்வரை இருக்கையின் நுணியில் அமர வைத்து, புலம்ப விட்டவர் ராமு. யார் அவர்...!

ABOUT THE AUTHOR

...view details