தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7am
7am

By

Published : Dec 3, 2020, 6:59 AM IST

1. திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்தது புரெவி புயல்!

புரெவி புயல் இலங்கை திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2.தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில்கள்!

தென்னக ரயில்வே நான்கு வழித் தடங்களுக்குச் சிறப்புத் தொடர்வண்டிகளை அறிவித்துள்ளது. கொச்சுவேலி முதல் நிலம்பூர், சென்னை முதல் ஹைதராபாத், சென்னை சென்ட்ரல் முதல் லோக்மானியா திலக், திருநெல்வேலி முதல் காந்திதம் ஆகிய நான்கு வழித் தடங்கள் இதில் அடங்கும்.

3.சொத்து குவிப்பு வழக்கு; ஜனவரி 27 விடுதலையாகிறார் சசிகலா?

சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரும் தோழியுமான சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

4.பலமுறை கூறியும் பாடம் கற்காத துணைநிலை ஆளுநர்: நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: கிரிக்கெட் மைதான விவகாரத்தில், துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

5.சாலை விபத்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி - முதலமைச்சர் உத்தரவு

சென்னை: சாலை விபத்து , நீரில் மூழ்கி உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

6. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி பார் கவுன்சில் பிரதமருக்கு கடிதம்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி பார் கவுன்சில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

7.ஆண்டின் சிறந்த 15 ஆப்பிள் செயலிகள்: நிறுவனம் அறிவிப்பு!

ஆப்பிள் ஆப் ஸ்டோர் 2020ஆம் ஆண்டின் 15 சிறந்த செயலிகளை தெரிவுசெய்துள்ளது.

8. ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவு

ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வதாவன் தெரிவித்துள்ளார்.

9.'கே.ஜி.எஃப்.' இயக்குநருடன் கைக்கோத்த 'பாகுபலி'!

பிரபாஸ் 'கே.ஜி.எஃப்.' இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

10.ஐஎஸ்எல்: ஸ்டீபனின் அசத்தல் கோலால் தோல்வியிலிருந்து தப்பிய ஜாம்ஷெட்பூர்!

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற ஹைத்ராபாத் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details