தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm - 5 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

5pm
5pm

By

Published : Jul 28, 2021, 5:09 PM IST

1. வன்னியருக்கான இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்!

வன்னியருக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை தடை செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.

2. ’தகைசால் தமிழர்’ விருது: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா!

தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

3. ’கல்லூரி ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்க வேண்டும்’

ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்க வேண்டும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி அறிவுறுத்தியுள்ளார்.

4. ’வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ - பழங்குடியின மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடியின மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

5. ’புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு’ - அமைச்சர் லட்சுமி நாராயணன்

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரை விரைவில் சந்திக்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

6. பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் கேள்வி

பெகாஸஸை மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

7. ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை

குவாட் கூட்டணி (அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) அமைப்பை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாக இருவரும் இன்று ஆலோசனை நடத்தினர்.

8. விஜய்யின் 'பீஸ்ட்' - ஆகஸ்ட்டில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

9.பெண்கள் குத்துச்சண்டை: கால் இறுதிக்குச் சென்றார் பூஜா ராணி!

பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பூஜா ராணி 5 - 0 என்ற கணக்கில் அல்ஜீரிய வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

10. டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: அடுத்த சுற்றிற்கு முன்னேறினார் தீபிகா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி, பூடான் வீராங்கனையை 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

...view details