தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top ten news @4pm

ஈடிவி பாரத் 4 மணி செய்திச் சுருக்கம்

4 மணி செய்திச் சுருக்கம் Top ten news @4pm
4 மணி செய்திச் சுருக்கம் Top ten news @4pm

By

Published : May 16, 2020, 4:01 PM IST

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை!

இன்று மாலை ஐந்து மணிக்கு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'கரோனாவிற்கான சிகிச்சைகள் தற்போது வரை அங்கீகரிக்கப்படவில்லை'

ஜெனிவா: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதுவரை சோதனை அடிப்படையிலேயே சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால்நடைகள் வளர்ப்பை மேம்படுத்த ரூ.15ஆயிரம் கோடி நிதி!

அனைத்துக் கால்நடைகளுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் அளிக்க 13,343 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், கால்நடை வளர்ப்புக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்ட திருத்தங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? - விவசாய பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் பேட்டி

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண்துறை சார்ந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் ஈடிவி பாரத் செய்திகளுக்கு தனது பிரத்யேக கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

ஓடும் ட்ரக்கில் குழந்தை பெற்றெடுத்த குடிபெயர்ந்த தொழிலாளி

மகாராஷ்டிராவிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ட்ரக்கில் சென்றுகொண்டிருந்த குடிபெயர்ந்த தொழிலாளி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

தொழிலாளர் பாதுகாப்பு முக்கியம் - மாயாவதி அறிவுறுத்தல்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 24 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் குடிபெயர்ந்தோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.

'குடிபெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாகப் பாருங்கள்' - சோனு சூட் உருக்கம்

ஊரடங்கால் மும்பையில் வேலையிழந்து, உணவு, உறைவிடமின்றி திண்டாடி வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடிகர் சோனு சூட்டின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தள்ளிவைக்கப்படுகிறதா டி20 உலகக்கோப்பை?

ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் குறித்த முடிவுகளை எடுக்க மே 28ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்த 113 வயது மூதாட்டி

மாட்ரீட்: ஸ்பெயினைச் சேர்ந்த 113 வயது மூதாட்டி கரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.

இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்கள்! லாவா ரூ.800 கோடி முதலீடு செய்ய முடிவு!

இந்தியாவை பூர்விகமாக கொண்ட லாவா இண்டர்நேஷனல் நிறுவனம், கைப்பேசி வடிவமைப்பு, உற்பத்தி, மேம்பாடு ஆகியவற்றுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details