தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 PM
3 PM

By

Published : Jan 13, 2021, 3:04 PM IST

1.சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்குச் செலவுத்தொகையாக 621 கோடி ரூபாய் ஆகலாம் - சத்ய பிரதா சாகு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்குச் செலவுத்தொகையாக தோராயமாக 621 கோடி ரூபாய் மாநில அரசிடம் தற்போது கேட்டுள்ளோம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

2. ’சசிகலா போற்றுதலுக்கு உரியவர்’ - கோகுல இந்திரா

சென்னை: ஜெயலலிதாவுடன் சேர்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலாவை கொச்சைப்படுத்தி பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

3.தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் மருத்துவப் பணியாளர்கள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷூல்டு, கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தயக்கம் காண்பித்துவருகின்றனர்.

4. 'பயங்கரவாதிகள் ஊடுருவ ரகசிய சுரங்கம்' - காஷ்மீரில் கண்டுபிடிப்பு!

காஷ்மீர்: சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் ரகசியமாக ஊடுருவ அமைக்கப்பட்டிருந்த சுரங்கத்தை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5.குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

6.யூ-ட்யூப் சேனல்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க உத்தரவு - சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

யூ-ட்யூப் சேனல்களில் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் ஏற்கெனவே பதிவுசெய்த காணொலிகளை எல்லாம் நீக்க சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

7.இண்டிகோ அலுவலக மேலாளர் சுட்டுக் கொலை

பாட்னா: இண்டிகோ அலுவலக மேலாளரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிரிழந்தார்.

8.கோவை கார் விபத்து: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

கோவை: கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

9.மாஸ்டர் படத்திற்கு 100% ரசிகர்களுக்கு அனுமதி... காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு

அரசு உத்தரவை மீறி மாஸ்டர் திரைப்படத்திற்கு 100 விழுக்காடு ரசிகர்களை அனுமதித்ததாக காசி திரையரங்கம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10.‘பிரிஸ்பேன் டெஸ்டில் புகோவ்ஸ்கி இடம்பெற மாட்டார்’ - ஜஸ்டீன் லங்கர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இளம்வீரர் வில் புகோவ்ஸ்கி இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details