தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 PM
3 PM

By

Published : Dec 5, 2020, 2:57 PM IST

1.2021இல் மீண்டும் ஆட்சி - ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுக உறுதிமொழி!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2.சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.4%

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.4% ஆக உள்ளது என மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

3.விவசாயிகள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்- ஐநா

இந்தியாவில் விவசாயிகளுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு. எனவே அலுவலர்கள் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ட்ஜாரிக் தெரிவித்துள்ளார்.

4. ‘வழக்கத்தைவிட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை’ - புவியரசன்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இம்முறை 39 செ.மீட்டராக பதிவாகியுள்ளது என்றும் அதாவது இயல்பைவிட 2 செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

5.புரெவி புயல் தாக்கம்: இடிந்துவிழுந்த தனுஷ்கோடி தேவாலய சுற்றுச்சுவர்

ராமநாதபுரம்: புரெவி புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடியில் நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

6.திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்!

திருவாரூர்: வடக்குவெளி கிராமத்தின் வழியாகச் செல்லக்கூடிய சித்தாற்றில் உடைப்பு ஏற்பட்டு கள்ளிக்குடி கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

7. தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ

டெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த பிக்சல் (Pixxel) என்ற தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளை இஸ்ரோ அடுத்தாண்டு ஏவவுள்ளது.

8.இந்தியாவின் எதிர்ப்பை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் கனடா பிரதமர்!

ஒட்டாவா: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதவராக குரல் கொடுத்த கனடா பிரதமருக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கு தொடர்ந்து துணை நிற்பேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

9.கரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டிலுள்ள 33 கரோனா சித்தா சிகிச்சை மையங்களிலும் உடனடியாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

10.ஜெயலலிதாவின் நினைவு தினம்: 'தலைவி' கங்கனா வெளியிட்ட அப்டேட்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுவரும் 'தலைவி' படத்தினை முடிக்க இயக்குநர் விஜய் கடுமையாகப் பணியாற்றிவருவதாக கங்கனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details