தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 pm
1 pm

By

Published : Dec 1, 2020, 1:30 PM IST

1. கலந்தாய்வில் இருந்து மாணவர் வெளியேற்றம்! - மறைக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகம்!

சென்னை: நேற்று நடந்த மருத்துவக் கலந்தாய்வில் இருப்பிடச் சான்றிதழ் பிரச்சனை காரணமாக மாணவர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. 'உயிரும் உள்ளமும் அங்கே!' - போராட்டத்தில் இறங்கியவர்களை தைலாபுரத்திலிருந்து உற்சாகமூட்டிய ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

3.புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

ராமநாதபுரம்: புரெவி புயல் எதிரொலியாக பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடைவிதித்துள்ளது.

4.மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

மக்கள் நீதி மய்யம் கட்சியில், இன்று இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபுவின் முடிவினை கமல்ஹாசன் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5.ஆந்திராவில் 120 கிலோ கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

6.பரோலில் வெளிவந்த கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்ப உ.பி. அரசு உத்தரவு

கரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி பரோலில் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில சிறைத் துறை உத்தரவிட்டுள்ளது.

7.கையூட்டு பெற்றதை ஒப்புக்கொண்ட உயர் அலுவலர் - கைது செய்த மும்பை லஞ்ச ஒழிப்புத்துறையினர்

மும்பை (மகாராஷ்டிரா): பதிவாளர் அலுவலகத்தில் பணி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் தரவரிசை உயர் அலுவலரும் அவரது மகனும் கையூட்டு பெற்றதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

8.அரசியலில் நுழைந்தார் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரதமரின் இளைய மகள்

பாகிஸ்தானில் குண்டுவைத்து கொல்லப்பட்ட முதல் பெண் பிரதமரான பெனாசீர் புட்டோவின் இளைய மகள் ஆசிஃபா புட்டோ சர்தாரி அரசியலில் காலடி எடுத்துவைக்கிறார்.

9.'1987-க்குப் பின் இப்படியொரு ஏற்றத்தைப் பார்த்ததே இல்லை' - அசந்துபோன முதலீட்டாளர்கள்

நியூயார்க்: அமெரிக்காவின் டவ் குறியீட்டு எண் 1987ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10.எனக்கு கரோனாவா? - புகைப்படம் வெளியிட்டு விளக்கமளித்த சிவகுமார்

சென்னை: நடிகர் சிவகுமார் தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details