தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ...

1PM
1PM

By

Published : May 3, 2021, 1:25 PM IST

1.மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2.'கரோனா பேரிடரை ஸ்டாலின் ஒழிப்பார்' - பாலகிருஷ்ணன்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3.முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

கரோனா தொற்று, கடன் சுமை, பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

4.ராமநாதபுரத்தை முழுமையாக கைப்பற்றிய திமுக கூட்டணி!

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றிபெற்று மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது.

5.ஸ்டாலின் பதவியேற்புக்கான நெறிமுறைகள் இதோ!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இனி அடுத்தடுத்து நடைபெறும் நெறிமுறைகள் குறித்து காண்போம்.

6.புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி!

புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

7.'சிறப்பான வகையில் திமுகவின் ஆட்சி நடக்கட்டும்' - மதுரை ஆதீனம் வாழ்த்து

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8.கொளத்தூரில் இருந்து கோட்டையேறுகிறார் ஸ்டாலின்!

சென்னை : நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

9.ஒட்டன்சத்திரத்தில் தனக்கு எண்ட் கிடையாது என்பதை நிரூபித்த சக்கரபாணி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக சக்கரபாணி வெற்றிபெற்று, திமுகவின் கோட்டை அது என்பதை நிரூபித்துள்ளார்.
10.தந்தை வழியில் தமிழை பாதுகாக்க வேண்டும் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இமயம்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details