தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 AM
11 AM

By

Published : Aug 4, 2021, 11:23 AM IST

1.இனி அன்னைத் தமிழிலும் அர்ச்சனை!

கபாலீசுவரர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் அன்னைத் தமிழிலும் அர்ச்சனை தொடங்குகிறது. இது மேலும் 47 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: தீவிரம் காட்டும் அதிமுக!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்றுமுதல் (ஆகஸ்ட் 4) மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்தவுள்ளது.

3. இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

4. கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இணையும் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

5. காவிரி ஆணையம் அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது - அண்ணாமலை

காவிரி ஆணையம் அனுமதி பெறாமல், அணை கட்ட முடியாது என்றும், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6. விஜய்யின் வழியில் தனுஷ்... கார் நுழைவு வரி வழக்கு விசாரணை

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015இல் தாக்கல் செய்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

7. 'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'

மத்தியில் நரேந்திர மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என அர்ஜுன் சம்பத் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

8. இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. இன்று வெளியாகும் 'பிரித்விராஜ்' பட டிரெய்லர்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் மனு வாரியர் இயக்கியுள்ள 'குருதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

10. மல்யுத்தம் - அரையிறுதியில் தீபக் புனியா

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 86 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details