தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11am
11am

By

Published : Aug 3, 2021, 11:02 AM IST

1.குடியரசுத் தலைவர் வருகை : நீலகிரியில் 3 அடுக்குப் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நீலகிரிக்கு வருவதையொட்டி மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

2. மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம்

நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாளை (ஆகஸ்ட் 4) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

3. தனி இடஒதுக்கீடு - நாடார் சங்கம் கோரிக்கை

நாடார் சமூகத்திற்கு 15 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

4.'யானை-மனித மோதல்' - 3 ஆண்டுகளில் 301 யானைகள் மரணம்

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் யானை-மனித மோதல் காரணமாக 301 யானைகள் உயிரிழந்துள்ளன.

5. அமைச்சரவை விரிவாக்கம்: நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளார்.

6. டெல்டா வகை கரோனாவுக்கு எதிராகச் செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

7. ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் கொலை!

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அதிமுக உறுப்பினரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் படுகொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் - பிரதமர் மோடி

ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஆறுதல் தரும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

9. ஏன் தாலி அணியவில்லை? - குக் வித் கோமாளி கனி கொடுத்த விளக்கத்தால் ஷாக்

குக் வித் கோமாளி பிரபலம் கனி தான் ஏன் தாலி அணியவில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

10. டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி

ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details