தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - top 10 news

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11am
11am

By

Published : May 8, 2021, 11:28 AM IST

1.முதலமைச்சருக்கான தனிச் செயலாளர்கள் நியமனம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2.மலைப்பாதையில் கவிழ்ந்த 2 லாரிகள் - ஓட்டுநர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர்!

ஆசனூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகின.

3.கேம்பிரிட்ஜில் பயிற்சி...சட்ட ஒழுங்கை காக்க வரும் தாமரை கண்ணன்!

சென்னை: சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தாமரை கண்ணனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

4.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் - தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய பொறுப்பாக இருக்கக்கூடிய உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்புக்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

5.பெண்கள் மேம்பாடு : நகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்று (மே.07) தலைமைச் செயலகத்தில் அதிரடியாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார்.

6.பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மேற்கு வங்கத்தில் கைது!

மேற்கு வங்கத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

7.கரோனாவால் ஒரே நாளில் 4,187 பேர் பலி

ஒரே நாளில் கரோனா பாதிப்பால் 4,187 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

8.பொறுப்பில்லாமல் செயல்படும் பிரதமர் - ப சிதம்பரம் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய சுகாதார அமைச்சரும் பொறுப்புகளை ஏற்க மறுப்பதாக ப சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

9. ராமநாதபுரத்தில் சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: சீட்டு விளையாடிய 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.18 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

10.ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி

சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details