தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 AM
11 AM

By

Published : Dec 7, 2020, 11:54 AM IST

1.கரோனா தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிகோரும் இந்திய நிறுவனம்

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டை அவசரகால பயன்பாட்டில் விநியோகிக்கக்கோரி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு, சீரம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

2.பெயரில் தொடங்கி சிப்பாய் கலகம் வரை... வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்த மாவீரன் திப்பு சுல்தானுக்கும் வேலூருக்கும் இடையே உள்ள வரலாற்று பக்கங்கள் குறித்த இங்கே பார்க்கலாம்....

3. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4.நன்னிலத்தில் முகாம்களை ஆய்வுசெய்த உணவுத் துறை அமைச்சர்!

திருவாரூர்: புரெவி புயல் தாக்கத்தால் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களைத் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

5. வே. ஆனைமுத்து உடல்நலம் குறித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்

சென்னை: பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலமடைய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

6.துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

கிழக்கு டெல்லி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

7.புதுச்சேரியில் மத்திய குழு இன்று ஆய்வு

புதுச்சேரி: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர்.

8. இடுக்கியில் தோட்டத் தொழிலாளிகள் இருவர் வெட்டிக்கொலை

இடுக்கி: கேரள மாநிலம் வலியதோவாலா பகுதியில் இரண்டு தொழிலாளர்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

9. நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

10.ட்விட்டரில் மோதிக்கொண்ட பிரபல நடிகர்கள்

நடிகர்கள் அனுராக் காஷ்யப்பும், அனில் கபூரும் ட்விட்டரில் நேற்று (டிச. 06) முதல் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details