தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச்சுருக்கம்.

1pm
1pm

By

Published : Jul 20, 2021, 1:15 PM IST

1. மதுசூதனனை சந்திக்க சசிகலா வருகை

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா வருகை புரிந்துள்ளார்.

2. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

3. பெகாசஸ் விவகாரம்- நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் திட்டம்!

பெகாசஸ் விவகாரத்தில் காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

4. மதுசூதனன் நலமுடன் இருக்கிறார்- அதிமுக

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நலமுடன் உள்ளார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 36,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6. கல்யாண் சிங் கவலைக்கிடம்!

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் கவலைக்கிடமாக உள்ளார். அவரது, உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

7. 125 நாள்களுக்கு பிறகு 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் கரோனா பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

8. காங்கிரஸின் பொய்களை முறியடியுங்கள்- நரேந்திர மோடி!

காங்கிரஸின் பொய்களை முறியடியுங்கள் என பாரதிய ஜனதா உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9. 19 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சுந்தரா டிராவல்ஸ் 2’

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

10. சாதனை படைத்த சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

சென்னை: 'சூர்யா 40' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை சமூகவலைதளத்தில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details