தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 15, 2020, 12:52 PM IST

சட்ட மேலவை உறுப்பினரான உத்தவ்: போட்டியின்றி தேர்வு

மும்பை: மகாராஷ்டிராவின் சட்ட மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் கரோனா தொற்று: குஜராத்தை நெருங்கும் தமிழ்நாடு

கரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்தை தமிழ்நாடு நெருங்கிவருகிறது.

ஊரடங்கு நீடித்தால் 60 விழுக்காடு வருவாய் இழப்பு - ஐஐடி ஆய்வில் தகவல்

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் 60 விழுக்காடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராம நிர்வாகி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டபோது சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நடந்தே பயணம்.... லாரியில் மறைந்து வந்த வடமாநிலத்தவர்கள் - போலீசார் விசாரணை

நீலகிரி: வெளிமாநில தொழிலாளர்கள் 72 பேர் லாரியில் மறைந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடரும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விபத்துகள்: உ.பி.யில் இருவர் உயிரிழப்பு

சொந்த ஊருக்கு நடைபயணமாக சென்ற குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது ட்ரெக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தயாரிப்பாளர்கள் ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகின்றனர்' - ஐநாக்ஸ்

ஊரடங்கு காலத்தில் திரைப்படங்கள் டிஜிட்டல் தளமான OTTயில் வெளியிட பல்வேறு படக்குழு முடிவுசெய்துள்ள நிலையில், இது குறித்து மல்டி ப்ளக்ஸ் திரையரங்கு நிறுவனமான ஐநாக்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயிற்சியின்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன...? - ஹாக்கி இந்தியா அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் மீண்டும் ஹாக்கி போட்டிகளுக்கான பயிற்சி தொடங்கும் போது வீரர், வீராங்கனைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவிப்புகளை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது.

கரோனா: 48% இந்தியர்களின் வெளிநாட்டுத் திட்டங்கள் பாதிப்பு

டெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் 48 விழுக்காடு இந்திய மாணவர்களின் திட்டத்தை பாதித்துள்ளது என்று குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

'தொழிலாளர் சட்டங்களில் சமரசம்'- ஆபத்தா, வளர்ச்சியா?

ஹைதராபாத்: இந்தியா ஏற்கனவே உலகின் மலிவான, மிகவும் சுரண்டப்பட்ட தொழிலாளர் சக்திகளில் ஒன்றாகும். தொழிலாளர் செலவுகள் இந்தியாவில் மொத்த தொழில்துறை செலவினங்களில் ஒப்பீட்டளவில் சிறிய விகிதத்தில் உள்ளன. இதற்கிடையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே இந்திய தொழிலாளர்களின் நிலைமை குறித்த சிறப்பு கட்டுரை.

ABOUT THE AUTHOR

...view details