தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - top 10 news update

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm

By

Published : May 18, 2020, 1:02 PM IST

மேற்கு வங்கத்தை நோக்கி அதிதீவிர புயலாக மாறும் ஆம்பன்!

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் 'ஆம்பன்' புயல், நேற்று அதிதீவிரப் புயலாக மாறியது. இன்று (மே18) இந்தப் புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதவியேற்பு: மேலவை மூலம் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்த தாக்கரே!

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மேலவை உறுப்பினராக பதவியேற்கும் நிலையில், அவரது பதவிக்கு இனி ஆறு மாத காலத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லை.

அகமதாபாத்தில் ஒரே வாரத்தில் அடையாளம் காணப்பட்ட 700 'சூப்பர் ஸ்பிரெடர்ஸ்'

அகமதாபாத்: காய்கறி விற்பவர், பால்காரர், மளிகைக் கடைக்காரர் உள்பட 12,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 700 பேர் சூப்பர் ஸ்பிரெடர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

'ஓ.சி.ஐ. விசா விவகாரத்தில் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்' - அமைச்சர் உறுதி

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடியுரிமை விசா விவகராத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

’கரோனா வர்க்க ரீதியான பாகுபாடு காட்டவில்லை: விளைவுகள் வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது’

ஹைதராபாத்: கரோனா வைரஸ் (தீநுண்மி) பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பாகுபாடு காட்டவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகவும் சீரற்றவை. அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான்.

காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை : குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலதாமதமின்றி அறிவிப்பை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'சீரான சுற்றுச்சூழலை தக்க வைக்க கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்' - பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: கரோனா வைரஸ் ஊரங்கில் ஏற்பட்டிருக்கும் சீரான சுற்றுச்சூழலை சாதாரண காலங்களிலும் தக்கவைக்க, மிகத் தீவிரமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மக்களின் முன்மொழிவு அடிப்படையில் மத்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்!

டெல்லி: லட்சக்கணக்கான டெல்லி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அமைந்துள்ளன என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"நிதிச்சலுகை" சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு - ப்ரதிம் ரஞ்சன் போஸ் சிறப்புக் கட்டுரை

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா சிறப்பு நிதிச்சலுகை குறித்து பொருளாதாரா நிபுணர் ப்ரதிம் ரஞ்சன் போஸ் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

மத்தியப் பிரதேசத்தில் தீ விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு

போபால்: க்வைலர் பகுதியில் உள்ள பெயிண்ட் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details