மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இன்று (பிப்.15) காலை 123 இணையருக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திவைக்கின்றனர். இதன்பின்னர், கார் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார்.
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான புதிய கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் இன்று (பிப்.15) விற்பனைக்கு வரவுள்ளது.