1. ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு பெய்துவந்த நிலையில் இன்று (பிப். 5) இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையோ அல்லது ஆலங்கட்டி மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2. அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தரமணியில் இன்று போராட்டம் நடத்தப்போவதாகத் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் 3. ஐஐடி கேட் தேர்வு
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
4. 'தீனி' பட ட்ரெய்லர்
இயக்குநர் அனி I.V. சசி இயக்கத்தில், அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் 'தீனி' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா - ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.
5. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.